Homeசெய்திகள்சினிமா'JR 34' படத்தின் ஷூட்டிங் எப்போது? .... ஜெயம் ரவி கொடுத்த அப்டேட்!

‘JR 34’ படத்தின் ஷூட்டிங் எப்போது? …. ஜெயம் ரவி கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தனது 34 ஆவது படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.'JR 34' படத்தின் ஷூட்டிங் எப்போது? .... ஜெயம் ரவி கொடுத்த அப்டேட்! அதேசமயம் ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். மீண்டும் வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் பண்ண இருக்கிறார். தனி ஒருவன் 2 திரைப்படமும் அவரது லைன் அப்பில் இருக்கிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி இயக்குனராக மாறப்போவதாகவும் யோகி பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 34 வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி JR 34 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். 'JR 34' படத்தின் ஷூட்டிங் எப்போது? .... ஜெயம் ரவி கொடுத்த அப்டேட்!ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைக்கவுள்ளார். தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் JR 34 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதனை நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

MUST READ