ஜூனியர் என்டிஆரின் தேவரா பட முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருந்த தேவரா பாகம் 1 திரைப்படம் நேற்று (செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். படத்தில் வில்லனாக சைஃப் அலிகான் நடித்திருந்தார். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டிருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வழக்கமான மாஸ் மசாலா கலந்த தெலுங்கு திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. படத்தின் எமோஷனல் காட்சிகளும் பார்வையாளர்களை ஒன்றிப் போகவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் ஜூனியர் என்டிஆர் வழக்கம்போல நடிப்பிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். இந்நிலையில் தேவரா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டுமே 172 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தின் வசூல், இனிவரும் நாட்களிலும் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.