Homeசெய்திகள்சினிமாஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பாஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட கடந்த ஒரு வாரங்களாக ஜப்பானில் இருந்து வந்துள்ளார். அதேசமயம் நேற்று ஜப்பானில் ஹொண்ஷு தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது ஜப்பானில் இருந்த ஜூனியர் என்டிஆர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடு திரும்பி உள்ளார். இது சம்பந்தமாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஜூனியர் என்டிஆர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ” ஜப்பானிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த ஒரு வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என என் இதயம் நினைக்கிறது. ஜப்பான் வலிமையாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ