காளி வெங்கட் நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் காளி வெங்கட். இவர் சமீப காலமாக சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜும் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஸ்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திகேயன் மணி எழுதி, இயக்கியிருக்கிறார். ஆனந்த் ஜிகே இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கே சி பாலசரங்கன் இசை அமைத்திருக்கிறார். மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வழங்குகிறது. இந்த படம் வருகின்ற ஜூன் 6-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வித்தியாசமான கதையில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.