Homeசெய்திகள்சினிமா'கடைசி உலகப் போர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

‘கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் கடைசி உலகப் போர் படத்தில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'கடைசி உலகப் போர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!ஹிப் ஹாப் ஆதி ஆரம்பத்தில் சில ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து அரண்மனை, ஆம்பள, தனி ஒருவன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதைத்தொடர்ந்து இவர் நடிகராகவும் இயக்குனராகவும் களமிறங்கி மீசைய முறுக்கு திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். மேலும் நட்பே துணை, சார் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து பெயர் பெற்றார். தற்போது இவர் ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் கடைசி உலகப் போர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை ஹிப் ஹாப் ஆதி தயாரித்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'கடைசி உலகப் போர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நடிகை அனகா, நாசர், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இதன் முதல் பாடல் நாளை (ஆகஸ்ட் 9) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ