Homeசெய்திகள்சினிமாபெங்களூரில் நடைபெறும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

பெங்களூரில் நடைபெறும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

-

நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.பெங்களூரில் நடைபெறும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு! அந்த வகையில் இறைவன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஏற்கனவே வெளியானது. அடுத்ததாக பிரதர், ஜீனி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதேசமயம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கும் பணிகளை கவனித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் படப்பிடிப்புகள் சென்னை போன்ற பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் நடைபெறும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை இடத்தை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனனின் பகுதிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் கசந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ