Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் 'கைதி 2'.... வெளியான புதிய தகவல்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ‘கைதி 2’…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், கார்த்தியின் கைதி படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் 'கைதி 2'.... வெளியான புதிய தகவல்!அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை கைதி படத்தில் வேறொரு பரிமாணத்தில் காட்டியிருந்தார். அதேசமயம் சாம் சி எஸ் – இன் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் கொடுத்தது. லோகேஷ் கனகராஜின் எல்சியு – வின் முதல் படமான இந்த படத்தின் குறியீடுகள் அவர் இயக்கிய விக்ரம், லியோ ஆகிய படங்களிலும் இடம்பெற்று இருந்தது. அடுத்தது கைதி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் 'கைதி 2'.... வெளியான புதிய தகவல்!அதன்படி இப்படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். ஆகையினால் கைதி 2 படத்தில் ரோலக்ஸ் (சூர்யா) மற்றும் தில்லி (கார்த்தி) மோதுவதைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு 2025-ல் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் 'கைதி 2'.... வெளியான புதிய தகவல்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கூலி படத்தை முடித்துவிட்டு வேறொரு புதிய படத்தை இயக்கப் போவதாகவும் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு 2026 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ