தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயர் பெற்றுள்ளார். இருப்பினும் திருமணம், குழந்தைக்குப் பிறகு சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகிய காஜல் அகர்வால் கமல்ஹாசனின் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது ஏ ஆர் முருகதாஸ், சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் சிக்கந்தர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
இந்நிலையில்தான் பேட்டி ஒன்றில், தன் மகனுக்காக செய்த செயல் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, “குழந்தை பிறந்த சமயத்தில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தேன். அந்த படத்தை தவிர்க்க முடியாதாமல் போனதால் திருப்பதியில் இருந்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் பயணம் செய்து ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்த கிராமத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்ல முடியாது என்ற காரணத்தால் என் மகனை நீளை திருப்பதி வரை அழைத்து வந்து என் பெற்றோருடன் தங்க வைத்திருந்தேன்.
அந்த சமயத்தில் தான் படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில் இரண்டு மணி நேர பயண தூரத்தில் என் வாகனத்தை நிறுத்தி தாய்ப்பால் எடுத்து கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பினேன். இவ்வாறு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என் மகனுக்காக தாய்ப்பால் எடுத்து படப்பிடிப்பில் இருந்தபடியே கொடுத்து அனுப்புவேன். ஏனென்றால் தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது” என்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார் காஜல் அகர்வால்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றுக் கொண்டாலே அழகு கெட்டுவிடும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக்கூடாது என்று நினைக்கும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.