Homeசெய்திகள்சினிமாநடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள்... கண்ணப்பா ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ்....

நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள்… கண்ணப்பா ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ்….

-

- Advertisement -
kadalkanni
வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். கடந்த 12 ஆண்டுகளில் தமிழ். தெலுங்கு, இந்தி என 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் காஜல். பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகதீரா திரைப்படம் காஜலின் வெற்றி கோட்டைக்கு முதல் படியாய் அமைந்தது.

தொடர்ந்து தமிழுக்கு வந்த காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்துவிட்டார். திருமணம், குழந்தைக்கு பிறகு மாறாத திறமையும், மாறாத இளமையுடன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள காஜல் இந்தியன் 3 படத்தில் நடித்து உள்ளார். அவரது நடிப்பில் கோஸ்டி, கருங்காப்பியம் ஆகிய படங்கள் வெளியாகின.

 

இதுதவிர தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கில் அவரது நடிப்பில் இறுதியாக சத்யபாமா என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதுதவிர விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா படத்தில் அவர் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வௌியாக உள்ளது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கண்ணப்பா படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வௌியிட்டுள்ளது.

MUST READ