சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படம் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் படத்தில் வில்லனாக ராகுல் போஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி படமானது வருகின்ற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி பேசி உள்ளார். “அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெரும். காக்க காக்க திரைப்படம் எப்படி சூர்யாவின் கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் ஒரு பெரிய இடத்தை பெறுவார்” என்று பாராட்டியுள்ளார்.
சூர்யாவிற்கு ‘காக்க காக்க’…. சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’….. ப்ரீ ரிலீஸ் விழாவில் பாராட்டிய சாய்பல்லவி!
-