Homeசெய்திகள்சினிமா'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' ..... விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா.ரஞ்சித்!

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ ….. விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா.ரஞ்சித்!

-

- Advertisement -

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' ..... விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா ரஞ்சித்!அதன்படி இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்திருந்தார். அதன்படி சமூகநீதி, சமத்துவம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை எடுத்துரைத்தார். 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' ..... விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா ரஞ்சித்!அதைத் தொடர்ந்து கூட்டணி பற்றி பேசிய விஜய் தனிப் பெரும்பான்மையுடன் வெல்ல முடியும் இருந்தாலும் தங்களுடன் இணைந்து பயணிக்க வேறு கட்சி விரும்பினால் அக்கட்சியையும் வரவேற்போம் என்றும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். சமீப காலமாக அரசியலில் அதிகாரப் பகிர்வு என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு மத்தியில் ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் அதிகார பகிர்வு பற்றிய இப்பேச்சை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் வரவேற்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன்முன் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் த. வெ.க தலைவர் விஜய் அண்ணா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி, மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்பட போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ