Homeசெய்திகள்சினிமாகலையரசன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கலையரசன் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

நடிகர் கலையரசன் தமிழ் சினிமாவில் ரஜினி, சூர்யா, கார்த்தி, ஆர்யா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தான் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கி வரும் வாழை படத்திலும் நடிக்க வருகிறார்.

இந்நிலையில் கலையரசன், ஆர் பி பாலா இயக்கும் ‘கொலைச்சேவல்‘ எனும் படத்தில் நடிக்கிறார். இதில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர் பி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இணைந்து தயாரிக்கின்றனர்.

we-r-hiring

சந்தன் என்பவரின் இசையிலும் முத்தையா என்பவரின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ