Homeசெய்திகள்சினிமாபரிசு மழையை பொழியும் கலாநிதி மாறன்.... 1.50 கோடி ரூபாய் காரை தட்டி தூக்கிய அனிருத்!

பரிசு மழையை பொழியும் கலாநிதி மாறன்…. 1.50 கோடி ரூபாய் காரை தட்டி தூக்கிய அனிருத்!

-

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத்திற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 7000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக் குவித்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இமாலய வெற்றியை படக்குழுவினர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சனை நேரில் சந்தித்து அவர்களுக்கு தனித்தனியாக காசோலை மற்றும் விலை உயர்ந்த கார்களை பரிசளித்துள்ளார். அதாவது ரஜினிக்கு BMW X7 நெல்சனுக்கு போர்ஷே காரையும் வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஜெயிலர் படத்தின் இத்தகைய வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது அனிருத்தின் இசைதான் அதனால் அவருக்கும் பரிசுகள் கிடைக்குமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி  கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் காசோலை வழங்கினார். அதைத்தொடர்ந்து 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றையும் வழங்கியுள்ளார். இது குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

MUST READ