spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயிலரின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்..... ரஜினிக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

ஜெயிலரின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்….. ரஜினிக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

-

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

we-r-hiring

அந்த வகையில் உலகம் முழுவதும் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 175 கோடியை தாண்டி உள்ளது.

இவ்வாறு ஜெயிலர் படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதன் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து காசோலை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ