கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான சலார் படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD திரைப்படம் உருவாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த படம் நேற்று (ஜூன் 27) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் பான் இந்திய அளவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளின் வெளியானது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்ததால் முதல் நாளிலேயே இந்த படம் உலகம் முழுவதும் 180 முதல் 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோரின் என்ட்ரியில் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரம் தான். சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. படத்தில் சில கேமியோ ரோல்களும் இடம் பெற்றிருந்தது. ஒரு பக்கம் படம் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது என ஒரு சொல்லப்பட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் இந்த படம் கார்ட்டூன் படம் போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த படம் முதல் நாளிலேயே அதிக வசூலை வாரி குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்னரே டிக்கெட் விற்பனையில் தெறிக்க விட்டது. அதிலும் ஐமேக்ஸ் ஸ்கிரீனில் ஒரு டிக்கெட் விலை 1300 வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இனி வரும் நாட்களில் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -