Homeசெய்திகள்சினிமாதாறுமாறாக வசூல் செய்யும் 'கல்கி 2898AD' ..... இப்போ எத்தனை கோடி தெரியுமா?

தாறுமாறாக வசூல் செய்யும் ‘கல்கி 2898AD’ ….. இப்போ எத்தனை கோடி தெரியுமா?

-

- Advertisement -

‘கல்கி 2898AD’ திரைப்படத்தின் 10 நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தாறுமாறாக வசூல் செய்யும் 'கல்கி 2898AD' ..... இப்போ எத்தனை கோடி தெரியுமா?நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அந்த வகையில் பான் இந்திய நடிகராக உருவெடுத்த பிரபாஸ் தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 600 கோடி வரை வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் பல நடிகர்கள் கேமியோ ரோல்களிலும் நடித்திருந்தனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரத கதையுடன் தொடர்புபடுத்தி
இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தாறுமாறாக வசூல் செய்யும் 'கல்கி 2898AD' ..... இப்போ எத்தனை கோடி தெரியுமா?அந்த வகையில் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியான இந்த படம் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. அதன் படி இப்படம் 10 நாட்களில் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது வார விடுமுறை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 1000 கோடியை நெருங்கிவிடும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ