நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பிரபாஸ் ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கல்கி 2898AD என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தை மே 9ஆம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஜூன் மாதம் படத்தை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.
இந்நிலையில் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று மாலை 7.15 மணியளவில் புதிய அப்டேட் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி இந்த அப்டேட் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -