Homeசெய்திகள்சினிமாகல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா'.... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் சூடான அப்டேட்!

கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் சூடான அப்டேட்!

-

- Advertisement -

கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா'.... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் சூடான அப்டேட்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் தற்போது ஜீனி, மார்ஷல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், மலையாளத்தில் லோகா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். துல்கர் சல்மான் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லோகா சாப்டர் 1: சந்திரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டோமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். இதில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இணைந்து அருண் குரியன், சந்து சலீம் குமார், சாந்தி பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சூப்பர்வுமன் படமாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் இப்படம் தமிழிலும் வெளியிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது. கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா'.... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் சூடான அப்டேட்!அதாவது இந்த படம் இந்தியாவின் மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ படமாக கருதப்படுவது மட்டுமல்லாமல் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லோகா திரைப்படத்தை 5 பாகங்களாக உருவாக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ