கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12ல் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த். அதைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார் விஜயகாந்த். ஆனால் நேற்றைய முன் தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று காலை அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூச்சு விட சிரமப்படுவதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் உயிர் இழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. விஜயகாந்தின் மறைவு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களும் தொண்டர்களும் கேப்டன் கேப்டன் என கதறி அழுகின்றனர். பலரும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். திரைப்பட பிரபலங்களும் விஜயகாந்த் மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக்…
— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2023
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது அன்பு சகோதரர் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகர் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தை கடைப்பிடித்து வாழ்ந்தவர் விஜயகாந்த். எதற்கும் அஞ்சாத துணிச்சல் தான் விஜயகாந்தின் அடையாளமாக இருந்தது. சினிமா அரசியல் என இரண்டு தளங்களிலும் தடம் பதித்த புரட்சி கலைஞர் தான் விஜயகாந்த். விஜயகாந்த் என்றும் நம் நினைவுகளில் நிலைத்து இருப்பார். அவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர் தொண்டர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


