spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் ரொம்பத் தாமதம் ஆன படம்... ஆடியோ வெளியிட்ட கமல்ஹாசன்!

விஜய் சேதுபதியின் ரொம்பத் தாமதம் ஆன படம்… ஆடியோ வெளியிட்ட கமல்ஹாசன்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் SP ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த்  இயக்கியுள்ளார்.

we-r-hiring

நடிகை மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ரிலீஸ் ஆன பாடில்லை. தற்போது படத்தை தூசிதட்டி ரிலீசுக்கு தயாரி செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் படத்தின் ஆடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அப்போது விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் உடன் இருந்தனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மே 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

MUST READ