Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்.... வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!

‘தக் லைஃப்’ டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்…. வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!

-

நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். 'தக் லைஃப்' டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்.... வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதனை அதிகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து திரிஷா, அசோக் செல்வன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தக் லைஃப்' டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்.... வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!மேலும் அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் கமல் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன. கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அதேசமயம் படத்தின் டப்பிங் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சிம்பு இதன் டப்பிங் பணிகளை தொடங்கி கிட்டத்தட்ட பாதி படத்திற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் என படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ