- Advertisement -
கல்கி ஏடி2898 படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கோலிவுட் எனும் குறுகிய வட்டத்தை தாண்டி உலக நாயகன் என உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்புக்கு ஈடு இவரே என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த உலக நாயகன் இன்று அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்தியன் 2, கல்கி ஏடி2898, தக் லைஃப் ஆகிய திரைப்படங்களில் உருவாகி வருகின்றன


இந்தியன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலும் கமல் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல,கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.



