Homeசெய்திகள்சினிமாஅன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து...... விஜய்க்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து…… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து...... விஜய்க்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்! தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கப் போவதாகவும் இந்த அரசியல் கதைக்களத்தில் தயாராக இருப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கிடையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். விஜயின் அரசியல் வருகைக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் இன்று (ஜூன் 22) தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், “அன்பு தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ