spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்..... எந்த படத்தில் தெரியுமா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் திரை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து 26 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் சமுத்திரகனி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும்  படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆனால் கொரோனா உள்ளிட்ட பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு முடங்கியது. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் வந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் கமலை இந்தியன் தாத்தாவாக மட்டுமல்லாமல் இளம் வயது கமலாகவும் காண்பிப்பதற்கு டியேஜிங் தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கமல் ஏற்கனவே அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவ்வை சண்முகியில் முழு படத்திலும் பெண் வேடத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெண் வேடத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ