Homeசெய்திகள்சினிமாகமல், ஸ்ருதி, லோகேஷ் கூட்டணியின் இனிமேல் ஆல்பம்..... புதிய வீடியோ வெளியீடு!

கமல், ஸ்ருதி, லோகேஷ் கூட்டணியின் இனிமேல் ஆல்பம்….. புதிய வீடியோ வெளியீடு!

-

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கமல், ஸ்ருதி, லோகேஷ் கூட்டணியின் இனிமேல் ஆல்பம்..... புதிய வீடியோ வெளியீடு!இதற்கிடையில் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடிக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த இனிமேல் பாடல் சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இனிமேல் ஆல்பம் பாடல் வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் லோகேஷ், கமல், ஸ்ருதி ஆகியோர் ஏதோ டிஸ்கஷனில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனராக இருந்த லோகேஷ்  நடிகராகவும், நடிகராக இருந்த கமல் பாடல் ஆசிரியராகவும், நடிகையாக இருந்த ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராகவும் இந்த ஆல்பத்திற்காக மாறி உள்ளனர் என புதிய கோணத்தில் அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த இனிமேல் ஆல்பம் பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது எனவும் விரைவில் வெளியாக இருக்கிறது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ