Homeசெய்திகள்சினிமாநெருங்கும் தேர்தல்... கமல்ஹாசன் போட்ட புது திட்டம்...

நெருங்கும் தேர்தல்… கமல்ஹாசன் போட்ட புது திட்டம்…

-

- Advertisement -
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், புதிய படங்களில் கமிட்டாகி இருக்கும் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்காக புது திட்டம் வகுத்திருக்கிறார்.

உலக நாயகன் கமல்ஹாசன் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் கமல் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தக் லைப் என்று தலைப்பு வைக்கப்பட்டது

முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இப்படத்தின் டைட்டில் வீடியோ படமாக்கப்பட்டு, வௌியிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் உள்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், தேர்தலும் நெருங்க உள்ளதால், முதலில் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட உள்ளனவாம்.

MUST READ