spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடமாகும் பில்கிஸ் பானு வழக்கு... ஆனால் கங்கனாவுக்கு புதிய சிக்கல்...

படமாகும் பில்கிஸ் பானு வழக்கு… ஆனால் கங்கனாவுக்கு புதிய சிக்கல்…

-

- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பாலிவுட் மட்டுமன்றி தமிழிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ். இப்படம் கடந்த அக்டோபர் மாதம்வெளியானது.

இதனிடையே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் நடிகை கங்கனா ரணாவத்தை டேக் செய்து டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் கூறிய கங்கனா, நான் அந்த கதையை படமாக்க விரும்புகிறேன். கதையும், ரெடியாக தான் உள்ளது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன், ஆனால், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் சில நிறுவனங்கள் அரசியல் ரீதியிலான படங்களை தயாரிப்பது இல்லை என எனக்கு பதில் அளித்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ