Homeசெய்திகள்சினிமாதொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கங்கனா ரணாவத்

-

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் வெளியாகும் அனைத்து படங்களும் தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதனால், அவர் கவலை அடைந்துள்ளார்.

கங்கனா நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம், தேஜஸ். சர்வேஸ் மேவாரா இயக்கிய இந்த திரைப்படத்தில் கங்கனா, விமானப்படை அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே இந்தப் படத்துக்குக் கூட்டம் வரவில்லை. பல திரையரங்குகளில் கூட்டம் இல்லாத காரணத்தால், காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ரூ.60 கோடியில் உருவான இந்தப் படத்திற்கு 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் கிடைத்து. இந்தப் படத்தோடு சேர்ந்து கங்கனா நடித்துள்ள, 10 படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளன.

இதற்கு முன் கங்கனா நடிப்பில் வெளியான சந்திரமுகி இரண்டாம் பாகம், தாக்கட், தலைவி, பங்கா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா, சிம்ரன், ரங்கூன், கட்டி பட்டி, ஐ லவ் நியூயார்க் ஆகிய திரைப்படங்களும் தோல்வியைத் தழுவி இருந்தன. இந்த தொடர் தோல்விகளால் நடிகை கங்கனா ரணாவத் கவலை அடைந்துள்ளார். அடுத்து அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

MUST READ