தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது தனது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். வரலாற்று சரித்திர படமாக உருவாகும் இந்த படமானது 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகியுள்ளது. அதன்படி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோவும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
அதேசமயம் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்குவா திரைப்படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பேட்டியில் கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி உள்ளார்.
“#Kanguva is a 2 Part movie. There is something exciting at the end of part-1 to hook the audience into part-2. Shooting for Part-2 begins on 2025 end or 2026 early & part-2 will release in theatres on 2027 Jan/Apr😲💥” pic.twitter.com/6kjeL0EVrA
— AmuthaBharathi (@CinemaWithAB) July 9, 2024
அவர் பேசியதாவது, “கங்குவா படமானது இரண்டு பாகங்கள் கொண்டது. பாகம் 1 இன் முடிவில் ரசிகர்களை பாகம் இரண்டிற்குள் கவர்ந்திழுக்க ஒரு அற்புதமான விஷயம் இருக்கிறது. கங்குவா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படும். மேலும் 2027 ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.