கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யா நடிப்பில் நேற்று (நவம்பர் 14) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் கங்குவா எனும் திரைப்படம் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்க வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் போதிய அளவில் பூர்த்தி செய்யவில்லை. நடிகர் சூர்யா தனது நடிப்பினால் படம் முழுவதும் தாங்கிப் பிடித்திருக்கிறார். சூர்யாவிற்கும் சிறுவனுக்கும் இடையிலான எமோஷனல் காட்சி ஓரளவிற்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது. படத்தின் விஷுவல்ஸ் மிரட்டலாக இருந்தது. இருப்பினும் சிறுத்தை சிவா திரைக்கதையில் சொதப்பிவிட்டார்.
திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருந்தால் பார்வையாளர்களை கவர்ந்திருக்கும். இவ்வாறு இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாளில் மட்டும் உலகம் முழுதும் கிட்டத்தட்ட 22 கோடி முதல் 35 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.


