கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார் வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் படத்திலிருந்து முதல் பாடலும் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி ‘Vamos Brincar Babe’ எனும் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலானது சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோருக்கும் இடையிலான பாடல் என்பதும் இந்த பாடல் நிகழ்காலத்தில் இடம்பெறும் பாடல் என்பதும் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி இருக்கும் கங்குவா படமானது 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.