சூர்யா நடிப்பில் மிக பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து சூர்யா, சிறுத்தை சிவா உள்ளிட்ட பட குழுவினர் கங்குவா ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே கங்குவா படத்தில் VFX போன்றவை தரமான தரத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ ப்ரோடக்ஷன் சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் கங்குவா படத்தை பட குழுவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் பட குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களையும் கிளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -