Homeசெய்திகள்சினிமாபிரபல கன்னட தயாரிப்பாளர் மறைவு... தூக்கிட்டு தற்கொலை...

பிரபல கன்னட தயாரிப்பாளர் மறைவு… தூக்கிட்டு தற்கொலை…

-

- Advertisement -
பிரபல கன்னட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அப்பு மற்றும் பப்பு, மஸ்த் மஜா மாடி, சிநேகிதரு மற்றும் ராம் லீலா உள்பட பல படங்களை கன்னட மொழியில் தயாரித்தவர் சௌந்தர்ய ஜெகதீஸ். இவர் கன்னட திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகிறார். படங்களை தயாரிப்பது மட்டுமன்றி, பல தொழில்களில் முதலீடுசெய்து தொழில் அதிபராகவும் உள்ளார். இப்படியான சூழலில் நேற்றிரவு பெங்களூரில் உள்ள அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெகதீஸ் அதிகாலை 4 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவரது உறவினர்கள் பேசுகையில், குடும்பத்தில் நிதி பிரச்சனை அல்லது அவருக்கு உடல்நலப் பிரச்சனைகளோ எதுவும் இல்லை என தெரிவித்தனர். மேலும், அண்மையில் அவரது மகளுக்கு திருமணம் நடந்ததையும் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஆனால், தயாரிப்பாளர் ஜெகதீஸ் அண்மைக் காலமாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளாார். இருப்பினும் இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஜெகதீஸ் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர்,, நடிகைகள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ