கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார் சிவராஜ் குமார். பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகனும், மறைந்த இளம் நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணனுமான சிவராஜ்குமார் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து திரையரங்கையே அதிர வைத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி கேப்டன் மில்லர் திரையரங்களில் வெளியாக உள்ளது. இப்படத்திலும் சிவராஜ் குமாருக்கு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது என சமீபத்திய பேட்டிகளில் அவரே உறுதிப்படுத்தினார். மல்டி ஸ்டாரர் படங்களின் ஆதிக்கம் தற்போது அதிகமாகி விட்டது. பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் ஒரு படத்தில் இணைவதன் மூலம் அப்படம் பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அந்த வகையில் அடுத்ததாக சிவராஜ் குமார் தெலுங்கிலும் தடம் பதிக்க உள்ளார். தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ராம்சரணுடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். புஜ்ஜி பாபு சனா இயக்கும் ராம்சரணின் 16வது படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் அவர் வில்லன் ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் அவர் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் நிச்சயம் இதுவும் ஒரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி சிவராஜ் குமார் ஒரு நேரடித் தமிழ்ப் படத்திலும் நடிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தினை இயக்குனர் வடிவேல் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- Advertisement -