- Advertisement -
நாளை ஒரே நாளில் நான்கு நட்சத்திரங்களின் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஃபைட் கிளப் படத்தில் விஜய் குமார் நடித்துள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது
தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. ஸ்க மூன், இ5 நிறுவனங்கள் இணைந்து கண்ணகி படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். படத்தில் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படமும் நாளை திரையரங்கிற்கு வரவுள்ளது.
