spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெண்கள் பட்டாளமான கண்ணகி.... முன்னோட்டம் வெளியானது...

பெண்கள் பட்டாளமான கண்ணகி…. முன்னோட்டம் வெளியானது…

-

- Advertisement -

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படத்தின் ட்ரைலர் வௌியாகி உள்ளது

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர்களில் ஒருவர் அசோக செல்வன். அண்மையில் அருண் பாண்டியனின் இளைய மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை அவர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளனர். பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்து உள்ளார். இந்நிலையில், அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து, கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற படத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring
இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகள் என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்க மூன், இ5 நிறுவனங்கள் இணைந்து கண்ணகி படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வௌியாகி உள்ளது. கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ராஜேஸ், மோகன் ராஜா, மாரி செல்வராஜ் ஆகியோர் படத்தின் முன்னோட்டத்தை வௌியிட்டு இருக்கின்றனர்.

MUST READ