Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்.... 'கண்ணப்பா' படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வெளியீடு!

மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்…. ‘கண்ணப்பா’ படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வெளியீடு!

-

- Advertisement -

மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கண்ணப்பா படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்.... 'கண்ணப்பா' படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வெளியீடு!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் மோகன்லால் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் துடரும் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இது தவிர மோகன்லால், வ்ருஷபா, ராம், ஹிருதய பூர்வம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் தமிழில் ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் மோகன்லால். மேலும் இவர் விஷ்ணுமஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ், அக்ஷய்குமார், சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை 24 பிரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் அடுத்த மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்நிலையில் மோகன்லாலின் பிறந்த நாளான இன்று (மே 21) அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ