கண்ணப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் இதிகாசங்களையும், புராணங்களையும் தழுவி எத்தனை படங்கள் வெளி வந்தாலும் அதை ரசிகர்கள் இன்றுவரையிலும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வகையில் பான் இந்திய அளவில் கண்ணப்பா திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக நடிக்கிறார். இவருடன் இணைந்து பிரபாஸ், மோகன் லால், அக்ஷய்குமார், சரத்குமார், மோகன் பாபு காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை 24 ஃபிரேம்ஸ் ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. ஷெல்டன் ஷா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஸ்டீபன் தேவசி இதற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படம் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படம் 2025 ஜூன் 27-இல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அடுத்தது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.