நடிகர் கார்த்தி, ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில்தான் ரவி, தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அதன்படி ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 26) சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் சிவராஜ்குமார், கார்த்தி, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் நடிகர் கார்த்தி, ரவி மோகன் குறித்து பேசி உள்ளார்.
“#RaviMohan has Narrated me a story. RaviMohan & Myself together will star in it, directed by RaviMohan himself🎬🔥. He performed it during script narration, he is like jim carrey😀”
– #Karthi pic.twitter.com/ddZrzihuaB— AmuthaBharathi (@CinemaWithAB) August 26, 2025

அதன்படி அவர், “ரவியிடம் எனக்கு பிடிச்ச விஷயம் அவரு மனசால கூட யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அது எனக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒரு கதை சொன்னார். அதுல நானும் ரவியும் சேர்ந்து நடிக்கப் போறோம். அந்த படத்தை ரவி மோகனே இயக்கப் போகிறார். ரவி ஒரு ஜிம் கேரி மாதிரி. உலக சினிமாவை உள்வாங்கிக் கொள்பவர். எடிட்டிங் எல்லாமே தெரியும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.