spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' .....படப்பிடிப்பு எப்போது?

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ …..படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' .....படப்பிடிப்பு எப்போது?நடிகர் கார்த்தி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ஜப்பான் திரைப்படம் கார்த்திக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 படத்திலும், பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' .....படப்பிடிப்பு எப்போது?

இதற்கிடையில் கடந்த 2022-ல் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நாட்டின் நீர் வளத்தை கொள்ளை அடிக்கும் ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்டை எதிர்த்து நிற்கும் ஸ்பையாக நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இது சம்பந்தமான தகவல்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி சர்தார் 2 படத்தின் பூஜை வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' .....படப்பிடிப்பு எப்போது?மேலும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது சர்தார் 2 படப்பிடிப்பு சம்பந்தமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கார்த்தி தற்போது கார்த்தி 26 கார்த்தி 27 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த இரண்டு படங்களையும் முழுவதும் முடித்துவிட்டு சர்தார் 2 படப்பிடிப்பில் இணைய உள்ளாராம். அதன்படி கார்த்தி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்புக்கு மார்ச் மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ