Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' ..... சிறப்பாக நடைபெற்ற பூஜை!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ ….. சிறப்பாக நடைபெற்ற பூஜை!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி தற்போது மெய்யழகன், வா வாத்தியார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கியிருந்த திரைப்படம் தான் சர்தார். கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' ..... சிறப்பாக நடைபெற்ற பூஜை!இதில் நடிகர் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அதன் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்தது. அது மட்டும் இல்லாமல் சர்தார் 2 திரைப்படமானது போதைப்பொருள் சம்பந்தமான கதை களத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகும் என சமீப காலமாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

we-r-hiring

இந்நிலையில் சர்தார் 2 படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பூஜை நிகழ்ச்சியில் கார்த்தி, பிஎஸ் மித்ரன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ