Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கும் கார்த்தி!

மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கும் கார்த்தி!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி, மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரேம்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகர் கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2, தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 ஆகிய படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் கார்த்தி. இதற்கிடையில் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி மாரி செல்வராஜ் – கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை பிரன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போகிறது. கடந்த வருடமே மாரி செல்வராஜ், கார்த்தியிடம் கதை சொல்லியதாகவும் அந்த கதை கார்த்திக்கு பிடித்து போனதாகவும் சொல்லப்படுகிறது.மாரி செல்வராஜ் தந்தையின் வாழ்க்கை கதையில் நடிக்கும் கார்த்தி! இந்நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல் என்னவென்றால், அந்த கதையானது மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதை எனவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும்  இந்த படம் மாரி செல்வராஜ் – கார்த்தி ஆகிய இருவரும் தங்களின் கமிட்மெண்டுகளை முடித்த பின்னர் தான் உருவாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்த வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ