ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் ஆகிய பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதற்கிடையில் இவர் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது ராகவா லாரன்ஸ்-ன் 25வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு RL 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ரமேஷ் வர்மா இயக்க ஏ ஸ்டுடியோஸ் நிறுவனமும் கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணியளவில் வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.