நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து வா வாத்தியார் திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் இவர் சர்தார் 2, கார்த்தி 29 ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்தி, மற்றுமொரு புதிய படத்தில் கேமியா ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஹிட் 3 திரைப்படம் உருவாகி வருகிறது. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தின் இறுதியில் ஹிட் 4 படத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த காட்சிகளில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஹிட் 4 படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.