spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர்... சுசித்ரா பேட்டிக்கு கார்த்திக் பதிலடி...

முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர்… சுசித்ரா பேட்டிக்கு கார்த்திக் பதிலடி…

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் ஆவார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி டப்பிங்கும் கொடுத்துள்ளார். இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, ‛சுச்சி லீக்ஸ்’ விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தில் இருந்து ஏராளமான சினிமா தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின

இது திரையுலகில் பெரும் சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு பிறகு சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார். அதுமட்டுமன்றி இன்று வரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல், ஆர்ஜேவாக அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி பேட்டியில் அவர்பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யாவும் விவாகரத்திற்கு முன்பே, ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக கூறினார்.

மேலும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகரும், சுசித்ராவின் முன்னாள் கணவருமான கார்த்திக் குமார் பேசியிருக்கிறார். ஒருவேளை தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் மகிழ்ச்சி தான், அதை வெளியே சொல்ல தயங்க மாட்டேன். செக்ஸ் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இதை வெளியே சொல்ல நான் அசிங்கப்பட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

MUST READ