பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். கடைசியாக இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜும், சூர்யாவும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் கன்னியாகுமரி சென்றுள்ளதாகவும் அங்கு 20 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் நிலையில் சமீபத்தில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
- Advertisement -