ஆகஸ்ட் மாதம் வெளியாகுமா மெய்யழகன்?… படக்குழுவின் புதிய திட்டம்…
- Advertisement -
நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். ஆனால், ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. மேலும், வசூலிலும் தோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை தனது அடுத்தடுத்த படங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து, கார்த்தியின் 27 வது படத்தை ’96’படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் சப்தம், தங்கலான் உள்பட பல திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக இருப்பதால், மெய்யழகன் படத்தை வேறொரு மாதத்தில் வெளியிடலாமா என படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.