spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதந்தையர் தின ஸ்பெசல்... கருமேகங்கள் கலைகின்றன பட லேட்டஸ்ட் அப்டேட்!

தந்தையர் தின ஸ்பெசல்… கருமேகங்கள் கலைகின்றன பட லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

தங்கர் பச்சான் நீண்ட காலங்களுக்கு பிறகு ‘கருமேகங்கள் கலைகின்றன‘ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை விஏஓ மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

தங்கர் பச்சனின் சிறுகதைகளை தழுவி உருவாக்கப்பட்ட அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்களை போல இந்த படமும் சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.

we-r-hiring

அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன், பாரதிராஜா, தங்கர் பச்சன் ஆகியோர் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த படத்தில் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் உலக தந்தையர் தினமான இன்று ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ