கருப்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கருப்பு’. இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தது விரைவில் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என சமூக வலைதளங்களை பேச்சு அடிபடுகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த படப்பிடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் திரிஷாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் சூர்யாவின் போர்ஷன் மிகச் சிறிய அளவில்தான் இருக்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பின்னர், இதன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையில் இந்த படமானது 2026 ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வரும் அல்லது 2026 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


