Homeசெய்திகள்சினிமாகுழந்தைப்பேறுக்காக லண்டன் சென்ற பிரபல பாலிவுட் நடிகை

குழந்தைப்பேறுக்காக லண்டன் சென்ற பிரபல பாலிவுட் நடிகை

-

இந்திய திரையுலகம் என கொண்டாடப்படுவது பாலிவுட் திரையுலகம். பாலிவுட்டில் ஏராளமான நடிகைகள் இருந்தாலும், சிலர் மட்டுமே உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். ஆலியா பட், தீபிகா படுகோன், கிருத்தி சனோன் வரிசையில் முக்கியமான நபர் கத்ரினா கைஃப். ஆங்கிலோ இந்தியனான இவர், ஆரம்பம் முதலே பாலிவுட் திரையுலகில் மட்டும் நடித்து வருகிறார். இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழில் அவர் திரைப்படம் நடிக்காவிட்டாலும், அவரது திரைப்படங்கள் தமிழிலும் பிரபலம் அடையும். இறுதியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி இருந்தார். இதனிடையே, அவர், பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிசியாக படத்தில் நடித்து வருகின்றனர்.

https://x.com/i/status/1792535133339201546

நடிகை கத்ரினா கர்ப்பமாக இருப்பதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், லண்டன் சாலையில் கத்ரீனாவும், அவரது கணவர் விக்கியும் நடந்து செல்லும் காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் கத்ரீனா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மேலும்,தனது குழந்தைபேறுக்காக அவர் லண்டன் சென்றுள்ளாராம்.

MUST READ